Posts

Showing posts from 2012

மூன்று வாரங்களில் மூன்று தேசங்கள்...

Image
முன்னேற்பாடுகள் மேற்படிப்பு(?!) முடித்துப் பட்டமேற்பு விழாவில் கலந்துகொள்வதற்கு முதல், மூன்று வார காலத்திற்கு ஒரு நாடோடி வாழ்க்கை வாழலாம் என்று முடிவு எடுத்து, எந்த செல்லுலோயிடுகளிலும் பதிவு செய்யப்படாத "மலேசியாவும் மனித உரிமைகளும்' என்ற என்னுடைய திரைப்படத்தின் இன்னொரு அத்தியாயத்திற்கு சுபம் வைத்துவிட்டு விமானம் ஏறிய போது நேரம் காலை 6.30. விமானநிலையப் பேருந்து தரிப்பிடத்தில் என்னை இறக்கிவிட்டு பிரியாவிடை பெற்றுச்சென்ற நண்பனுடன் என்னை மலேசியாவுடன் இணைத்திருந்த தொப்புள்கொடியின் கடைசி இழையமும் அறுந்து போனது. இறக்கமுடியாத சுமையாக என்னைத்தொடர்ந்த பயணப்பொதியையும் மனதையும் சுமந்துகொண்டு சரியான பேருந்து தேடிப்பிடித்து வசதியான ஆசனத்தில் அமர்ந்தபோது இதயத்தின் எடை ஏறி  இருந்தது. பிரியாவிடைகள் ஒன்றும் புதிதில்லை என்ற போதும் ஒவ்வொருமுறை பிரியாவிடை பெறும்போதும் மனதின் எதோ ஒரு மூலையில் வலிக்கத்தான் செய்கிறது. கடந்து வந்தவைகளையும்  இனிக் கடக்கப்போவனவற்றையும் கணக்குப்போட்டபடி பேருந்துடன் கூடவே பயணித்த மனதில் ஒரு இனம் புரியாத உணர்ச்சி. ஒரு மணி நேரப் பயணத்தின் முடிவில் விமானநிலையமடைந்த  ப

மூன்று வாரங்களில் மூன்று தேசங்கள்...

Image
முன்னேற்பாடுகள் மேற்படிப்பு(?!?!) முடித்துப் பட்டமேற்பு விழாவில் கலந்துகொள்வதற்கு முதல், மூன்று வார காலத்திற்கு ஒரு நாடோடி வாழ்க்கை வாழலாம் என்று முடிவு எடுத்து, எந்த செல்லுலோயிடுகளிலும் பதிவு செய்யப்படாத "மலேசியாவும் மனித உரிமைகளும்' என்ற என்னுடைய திரைப்படத்தின் இன்னொரு அத்தியாயத்திற்கு சுபம் வைத்துவிட்டு விமானம் ஏறிய போது நேரம் காலை 6.30. விமானநிலையப் பேருந்து தரிப்பிடத்தில் என்னை இறக்கிவிட்டு பிரியாவிடை பெற்றுச்சென்ற நண்பனுடன் என்னை மலேசியாவுடன் இணைத்திருந்த தொப்புள்கொடியின் கடைசி இழையமும் அறுந்து போனது. இறக்கமுடியாத சுமையாக என்னைத்தொடர்ந்த பயணப்பொதியையும் மனதையும் சுமந்துகொண்டு சரியான பேருந்து தேடிப்பிடித்து வசதியான ஆசனத்தில் அமர்ந்தபோது இதயத்தின் எடை ஏறி  இருந்தது. பிரியாவிடைகள் ஒன்றும் புதிதில்லை என்ற போதும் ஒவ்வொருமுறை பிரியாவிடை பெறும்போதும் மனதின் எதோ ஒரு மூலையில் வலிக்கத்தான் செய்கிறது. கடந்து வந்தவைகளையும்  இனிக் கடக்கப்போவனவற்றையும் கணக்குப்போட்டபடி பேருந்துடன் கூடவே பயணித்த மனதில் ஒரு இனம் புரியாத உணர்ச்சி. ஒரு மணி நேரப் பயணத்தின் முடிவில் விமானநிலையமடைந்த